மட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபருக்கு வாழ்த்து

0
812

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அரசாங்க அதிபர் மா.உதயகுமாருக்கு தமது வாழ்த்துக்களையும், வரவேற்பினையும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய நிருவாகம் சார்பாக தெரிவித்துக் கொள்வதற்காக ஆலயத்தின் வண்ணக்கர் செயலாளர் இ.சாந்தலிங்கம் இன்று(15) புதன்கிழமை குறிப்பிட்டார்.

செயலாளர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின், பிரதேச செயலாளராக கடமையாற்றிய காலத்தில், சிறப்பான சேவைகளை பிரதேசத்திற்கு ஆற்றியிருந்தார். யுத்தம் எமது பிரதேசத்தில் இடம்பெற்ற போதும், போக்குவரத்துப் பிரச்சினைகள் இருந்த போதும் சிறப்பான சேவைகளை மக்களுக்கு வழங்கியிருந்தார். இதன் பின்னரும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளராக இருந்தும் சிறப்பான சேவைகளை முன்னெடுத்தார். இவ்வாறான நிலையில் சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாக பதவி உயர்வு பெற்று அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். இதன் மூலம் பரந்துபட்ட சேவைகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றிருக்கின்றது. இவ்வாறு மட்டக்களப்பு மக்களுக்கு மீண்டும் சேவை செய்வதற்கு கிடைத்த இவ்வாய்ப்பினை பயன்படுத்தி சிறப்பான சேவைகளை மக்களுக்கு ஆற்றவேண்டும், ஆற்றுவீர்கள் என எதிர்பார்க்கின்றோம் இதற்கு தான்தோன்றி அப்பனது ஆசிகளும் கிடைக்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கின்றேன். என்றார்.