08வது சர்வதேச கணித திறனாய்வுப் போட்டியில் மட்டக்களப்பிற்குப் பெருமை சேர்த்த மாணவன்

0
259

தாய்லாந்து நாட்டில் இம்மாதம் 12ம் திகதி இடம்பெற்ற 08வது சர்வதேச கணித திறனாய்வுப் போட்டி 2017ற்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழுவின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திச் சென்ற செல்வன் துரைராசசிங்கம் இமயவன் தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கம் பெற்று உயர்தகைமை அடிப்படையிலான சான்றிதழும் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் தரம் 09ல் கல்வி பயிலும் இம்மாணவன் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி திருமதி கலையரசி துரைராசசிங்கம் ஆகியோரின் புதல்வனுமாவார்.

இவர் கடந்த 2015ம் ஆண்டு தாய்லாந்தில் இடம்பெற்ற கணித ஒலிம்பியாட் போட்டியிலும் வெண்கலப் பதக்கம் பெற்று எமது மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.