சுனாமி அனர்த்தத்திற்கான எச்சரிக்கை இல்லை – மக்கள் பீதியடைய தேவையில்லை.

0
1576

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கைக்கான எவ்வித தகவலும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் மக்கள் பீதியடைய தேவையில்லையென மட்டக்களப்பு மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.எம்.வி.சி முகமட் றியாஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப்பகுதியில் உள்ள கிணறுகள் இன்று காலை வற்றியதாக கூறி மக்கள் குழப்பமடைந்து, அச்சமடைந்த நிலையிலே, இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே இதனைக் குறிப்பிட்டார்.