ஆரையம்பதியில் உள்ள மதுபானசாலைகளை அகற்றக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

0
142

ஆரையம்பதியில் உள்ள மதுபானசாலைகளை அகற்றக் கோரி மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று, இன்று (13) காலை முன்னெடுக்கப்பட்டது.

கவனயீர்ப்பைத் தொடர்ந்து மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயத்திடம் மகஜரென்றும் கையளிக்கப்பட்டது.

ஆரையம்பதியில் இயங்கிவரும் மதுபான விற்பனை நிலையம் தொடர்பில், இலங்கை மதுவரித்திணைக்கள உயர் அதிகாரிகள், மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்கு, இன்று (13) வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.