எங்களை அடக்கியாள்கின்ற பெருபான்மை இனத்திற்கு முன்னால் நாங்கள் வெட்ட வெட்ட தளைக்கும் மரத்தைபோல் மீண்டும் மீண்டும் வளரவேண்டிய கடப்பாடு எமக்குண்டு

0
180
(கமல்)  எங்களை அடக்கியாள்கின்ற பெருபான்மை இனத்திற்கு முன்னால் நாங்கள் வெட்ட வெட்ட தளைக்கும் மரத்தைபோல் மீண்டும் மீண்டும் வளரவேண்டிய கடப்பாடு எமக்குண்டு என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை தெரிவித்தார்
கிழக்கிலங்கை இந்துசய சமூக அபிவிருத்தி சபையினால் நடாத்தப்பட்ட கிழக்கின் இந்து எழச்சி விழா தலைவர் துஷ்யந்தன் தலைமையில் வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
எமது மத்தினையும் இனத்தினையும் மறுமலர்ச்சி அடையசெய்ய வேண்டிய காலகட்டதில் இருந்து கொண்டிருக்கின்றோம். எமது சமயரீதியான பாராம்பரியங்கள் தற்காலத்து இளம்சமூகத்தின் மத்தியில் அழிந்துபோய் கொண்டு இருக்கின்ற நிலை காணப்படுகின்றது. இதனை கருத்திற் கொண்டு இந்த கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி ஒன்றியமானது எடுத்துவரும் இவ்வாறான நிகழ்வுகள் பாராட்டுக்குரியது.
நாங்கள் மதத்தை வளர்க்க வேண்டுமாயின் ஆரம்பத்தில் இருந்து அறநெறிகளை கற்றுக்கொடுக்கவேண்டும். ஒரு இனம் வாழ்வதற்கான அடையாளமாக கொள்வதில் மதமும் ஒன்றாகும், அதற்கானசான்றாக அமைவது வழிபாட்டு தலங்களாகும். அதில் பின்னபற்றப்படுகின்ற பழக்கவழக்கங்கள்தான் எமது பாராம்பரியத்தின் இருப்பாக அமைகின்றது. எனவே எமது இனத்திற்கும் மதத்திற்கும் செய்கின்ற தலையாய கடமை என்னவென்றால் இவைகளுடன் கல்வியையும்  கட்டியெழுப்ப வேண்டும். இவ்வாறு கட்டியெழுப்பழனால்  இழந்த வற்றை மீளப்பெறுகின்ற இனமாக எமது தமிழினம் எதிர்காலத்தில் மாற்றடையமுடியும்.
தற்போதைய சுழலினை பார்த்தால் வெட்ட வெட்ட தளைக்கும் மரத்தைபோல்  எங்களை அடக்கியாள்கின்ற பெருபான்மை இனத்திற்கு முன்னால் நாங்கள் மீண்டும் மீண்டும் வளரவேண்டிய கடபாடு எமக்கு இருக்கின்றது. இதற்காக மக்களே   நீங்கள் உங்களை அற்பணித்து செயற்பட வேண்டும். இனம்சார்ந்த அனைத்திலும் நாங்கள் பற்றுக் கொண்டவராக இருக்கவேண்டும். இதுவே தற்காலத்திற்கு பொருத்தமாதொன்றாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.