எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அனைவரும் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தவேண்டும்

0
319
(கமல்) எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேரிதலில் அனைவரும் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தவேண்டும் என பட்டிருப்பு தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் இ.தவஞானசூரியம் தெரிவித்தார்.
 எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் பட்டிருப்பு தொகுதியில் உள்ளடங்கிய மண்மனை தென் எருவில் பற்று, போரதீவு பற்று, போரதீவுப்பற்று மேற்கு ஆகிய பிரதேச சபையில்  ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தேரந்தெடுப்பதற்கான கலந்தரையாட்ல் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அன்னாரது கட்சிகாரியாலயத்தில் நடைடெபெற்றது அதில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். .
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
பட்டிருப்பு தொகுதி மக்கள் இம்முறை எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தும் வகையில் வாக்களிக்க வேண்டும். இந்த நாட்டிலே என்றும் இல்லாதவாறு நல்லாட்சியினை உருவாக்கி அனைத்து இனமக்களின் ஒற்றுமைக்காக பாடபட்டு வருகின்றார். தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என்றதன் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றார. இந்த சந்தர்பப்த்தை நாங்கள் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்.
பட்டிருப்பு தொகுதியானது அவர் இந்த நாட்டின் ஜனாதிபதி ஆவதற்கு கனிசமான பங்களிப்பை செய்துள்ளதை அவர் மறக்கவில்லை இதற்கா அவர் அபிவிருத்தியல் பட்டிருப்பு தொகுதிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதனை அவர் உறுதியளித்துள்ளார். எனவே இந்த சந்தரப்பத்தை நாங்கள் பலப்படுத்த வேண்டும்.இத் தொகுதியில் இடம்பெறவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் எழுத்து மூலம் அவரிடம் நான் அறிவித்துள்ளேன். அதற்கான பதிலும் எனக்கு கிடைத்துள்ளது.
பட்டிருப்பு தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத குறையொன்று உள்ளது இதனை கருத்திற் கொண்டு ஜனாதிபதியின் கவனம் தொகுதிமேல் இருக்கின்றது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது இற்கு நிற்சயமாக ஜனாதிபதி அவர்கள் இத் தொகுதிக்கு வருகை தர இருக்கின்றார் என்ற செய்தியை நான் உங்களுக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன் இதன்போது நேரடியாக எமது தொகுதி நிலமை தொடர்பில் எடுத்தியம்ப இருக்கின்றேன்.  நீங்கள் இதற்காக மக்கள் பலத்தை நிருபித்து காட்டவேண்டும். எனவே எமது பிரதேசங்களின் அபிவிருத்திக்கும், மக்களின் வாழ்க்கைதர உயர்வுக்கும் நாங்கள் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தவேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.