மட்டு. கல்லடியில் ஆர்ப்பாட்டம்

0
666

மட்டக்களப்பு கல்லடி,உப்போடை சிவானந்த விளையாட்டு மைதானத்துக்கு அருகில் இன்று காலை (10) ஒன்றுகூடிய மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கல்லடி பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதியை நகரசபையின் கீழ் கொண்டுவரக்  கோரியும்,  குறித்த பகுதிகளில் உள்ள சில இடங்களை காத்தான்குடி நகரசபையுடன் இணைப்பதை நிறுத்துமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொது அமைப்புகள் இணைந்து  ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பல்வேறு வாசகங்களை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.