எரிபொருள் வழமைபோல் விநியோகம்

0
452

இன்று முதல் எந்தவித தட்டுப்பாடும்தடையுமின்றி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலை பெற்றுக்கொள்ள முடியும் என்று பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக நெவஸ்கா லேடி என்ற கப்பல் மூலம் எரிபொருள் கொண்டுவரப்பட்டது.
இதில் ஒக்டெயின் 92 ரகத்தை சேர்ந்த பெற்றோல் 32 ஆயிரத்து 500 மெற்றிக் தொன்னும் ஒக்டெயின் 95 ரகத்தை சேர்ந்த பெற்றோல் ஏழாயிரத்து 500 மெற்றிக் தொன்னும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.