கண்ட இடமெல்லாம் வடி நிண்டவனெல்லாம் குடிக்கிறான்

0
1154

(படுவான் பாலகன்) கண்ட இடமெல்லாம் வடி வடிக்கிறார்கள், வயது வித்தியாசமின்றி குடிக்கிறானுகள் இத கட்டுப்படுத்த யாருமில்லை. அரசியல்வாதிக்கும்  அதிகாரிகளுக்கும் இதுபற்றி தெரியும். ஆன இதனை கட்டுப்படுத்த முழுமூச்சா நின்று செயற்பட யாரும் தயாரில்ல போலத்தான் தெரியுது.

அரசாங்கத்தாலையும், நிறுவனத்தினாலையும் விழிப்புணர்வு செய்றானுகள், ஆனா இன்னும், இன்னும் சொப்பின் வேக்கு யாவாரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அண்மைகாலமாகத்தான் நமது பிரதேசத்தில் வடி உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்திருக்கின்றது.  முன்பெல்லாம் வடிக்கிறது மிகக்குறைவு. அதேபோல குடிக்கிறவர்களும் மிகக்குறைவு. இப்பெல்லாம் வீட்டிலே சோற்றுச்சட்டியிலும் வடிக்கிறார்களாம். இதனால வீட்டுக்கு வீடு வார் இருக்கென்றும் பேசிக்கொள்கின்றார்கள்.

எப்படி வாழ்ந்த படுவான்கரை சமூகம், இப்படி போயிட்டா என்று நினைக்கவே முடியாம இருக்கு. அதுவும் இளசுகளும் இதுக்கு அடிமையாகித்ததானுகள். என்று நினைக்க சிறகுகளும் அடிக்க முடியல்ல. எலெக்சனும் வரபோகுது, அதற்கு இப்பவே இடம்தேடித் திரிகிறார்களாம். இனியென்ன யானையாக்குவன்? பூனையாக்குவன் எண்ணுவானுகள் ஒன்றும் நடக்காது. மேடையேறி வாய்கிழிய கத்திட்டு கழுத்தில மாலையும் வாங்கிட்டு போய்யிடுவானுகள். நம்மிட சனம் இப்படியே குடிச்சு குடிச்சு செத்திவிடும் போலத்தான் தெரியுது. ஆன ஒன்றுமட்டும் சொல்லுறன் முன்னர் மாதிரி இப்ப நம்மட சனத்த இலகுவாக ஏமாற்றவும் ஏலாது. இப்படியான பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறவர்களுத்தான் வாற எலெக்சனிலையும் வோட்டு விழும். எட்டு நினைக்கன். என மணற்பிட்டி ஆற்றின் ஓரத்தில் உள்ள மரத்தில் குந்திக்கு கொண்டு கூவான்கோழியும் கொட்டப்பாக்கான் குருவியும் பேசிக்கொண்டது. இந்த ஜீவன்கள் இரண்டுக்கும் இருக்கின்ற அக்கறையும் கூட ………………………………. இல்லை.