பாடசாலை மாணவர்களை போராட்டங்களில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் விசாரணை

0
266
பாடசாலை மாணவர்களை பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவுறுத்தியுள்ளார்.
சில சிவில் அமைப்புகள் அரசியல் நோக்கில் பாசடாலை மாணவர்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அனுமதி இன்றி, இவ்வாறான பேரணிகளில் ஈடுபடுத்துவதாக தகவல்கிடைத்துள்ளது.
இதுதொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்தநிலையில் அது குறித்து விசாரணை நடத்துமாறு கல்வி அமைச்சர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.