வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் 50,000 ​செங்கல் வீடுகள்

0
317

05:44 PMகுறுந்தகவல் மூலம் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு வரி அறவிடப்படும்.

05:42 PMஉள்நாட்டு அல்லாத வெளிநாட்டு மதுபானங்களுக்கு வரி

05:40 PMவங்கிப் பரிமாற்றல்களுக்காக 1000 ரூபாய்க்கு 20 சதம் வரி அளவிடப்படும்.

05:39 PMதன்னால், தனியா இருந்துகொண்டு, நாட்டின் கடன்களை செலுத்தமுடியாது என்று, நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

05:38 PM2018ஆம் ஆண்டுக்குள்,   1.9 டிரில்லியன் ரூபாய் கடன் செலுத்தப்படவேண்டும்.

05:33 PM காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கு 1.4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

05:30 PMதம்புளை மற்றும்  கொழும்புடன் இணைக்கப்பட்ட நவீன​ பொருளதார மையமொன்று, யாழ்ப்பாணத்தில் நிறுவப்படவுள்ளது.

05:29 PMவடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணத்தில், கடன் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளவர்களுக்கு, சிறிய வட்டியினாலான கடன் வசதிகள் வழங்குவதற்கு, 1 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

05:28 PMஓய்வுக்குப் பின்னர், எதிர்காலத்துக்கான விவசாய காப்பீடு.

05:27 PMவடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் 50,000 ​செங்கல் வீடுகள் நிர்மாணிக்கப்படும். வடக்கு கிழக்கு வீடமைப்புக்கு 3 பில்லியனும் பெருந்தோட்டத்துக்கு 2 பில்லியனும்.

05:22 PMகலைஞர்களுக்கான மருத்துவ காப்பீடு.

05:21 PMதொல்பொருள் தளங்களின் புனரமைப்புக்கு, 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

05:19 PMஇரத்தினபுரி, வெலிமடை நீதிமன்ற வளாகங்களை, மாற்ற இடங்களுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை.

05:19 PMபௌத்த வாசிகசாலையொன்றை அமைப்பதற்கு, 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு,

05:13 PMநீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, நவீன பதிவு செய்யக்கூடிய வகையிலான இயந்திரங்களுடன் கூடிய வசதிகளுக்கு 900 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

05:11 PMஅமைதிப்படைக்கு, இலங்கையில் இருந்து அனுப்பப்படும் இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்குமாறு, ஐ.நா கோரியுள்ளது. அதில் பங்கேற்கும் இராணுவத்துக்கு பயிற்சியளிப்பதற்கு 750 மில்.ஒதுக்கீடு,

05:10 PMபொலிஸ் மற்றும் குற்றப் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு, 500 மில்லியனுக்கு அதிகமான நிதியொதுக்கீடு,

05:08 PMவன விலங்குகள் குறித்து கவனம் செலுத்தப்படும்.

05:07 PMகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை, 20,000 வீடுகளைக் கொண்ட தொகுதி, 2020இல் நிர்மாணிக்கப்படும்.

05:06 PMபாடசாலை மாணவர்களுக்கு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதார காப்புறுதித்திட்டம் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.

05:05 PMலயன் திட்டங்களை ஒழித்து 25,000 வீடுகளை அமைக்கும்  மத்தியத்திட்டத்துக்கு 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு,

05:04 PMவடக்கில் இடம்பெயர்தோருக்காக ஆரம்பிக்கபட்டுள்ள வீடமைப்புத்திட்டத்துக்கு, 3000 மில்லியன் ஒதுக்கீடு

05:03 PMமதுபானத்தின் மீது, தேசியத்தைக் கட்டியெழுப்பும் வரி 2018 ஏப்ரல் 1ஆம் முதல் அறவிப்படும்.

05:02 PMஎச்ஐவி மற்றும் எய்ட்ஸ் ​நோய் அறிகுறிகளை, ஆரம்பக்கட்டத்தில் கண்டுபிடிப்பதற்கு, 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடு,

05:01 PMகுளிர்பானங்களில் சேர்க்கப்படும் ஒரு சதவீத சீனியின் அளவுக்கு 50 சதம். வரி.இன்று இரவிலிருந்து அமுலில்.

04:58 PMசுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்ய 200 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

04:57 PMவிளையாட்டு காலணிகளில் இறக்குமதி வரி நீக்கப்படும்.

04:56 PMமஹாபொல புலமைப்பரிசிலுக்கு, வருடாந்தம் ஒதுக்கப்பட்ட 300,000 ரூபாய் 500,000ரூபாயாக அதிகரிக்கப்படுவதோடு, 3,000 கூடுதல் மாணவர்கள் புலமைப்பரில்களைப் பெற்றுக்கொள்வர்,

04:55 PMகிராமிய மட்டத்தில் 100 விளையாட்டு மைதானங்களை அபிவித்தி செய்ய 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

04:53 PMசுதேச மருத்துவத்துக்கான ஒரு பட்டப்படிப்பு நிறுவனம் நிறுவப்படும்.

04:52 PMவயம்ப, சப்ரகமுவ மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியை அபிவிருத்தி செய்வதற்க, 1.25 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

04:51 PMஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை அதிகரிக்க ரூ 750 மில்லியன் ஒதுக்கீடு.

04:51 PMமரபியல், ரோபோட்டிக்ஸ் மற்றும் நனோ தொழில்நுட்பங்கள், பாடத்திட்டங்களில் உள்ளடக்கப்படும்.

04:50 PMயாழ். வளாகத்துடன் இணைந்த வவுனியா வளாகத்துக்கு, புதிய நூலகம்

04:49 PMவிலைமதிப்பற்ற கற்களை வெட்டுதல், மெருகேற்றி ஏற்றுமதி செய்வதற்கு இலங்கைக்கு கொண்டுவரப்படும் போது, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி விதிக்கப்பட மாட்டாது.

04:46 PMதேசிய கல்வி நிறுவனங்கள் மறுசீரமைப்பு.

04:43 PMஜேர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்தின் உதவியுடன், புதிய ஐந்து தொழிற்பயிற்சி நிலையங்கள் நிர்மாணிக்கப்படும்.

04:43 PMகழிவு முகாமைத்துவத்தை நிர்வகிக்க, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உடனடியாக அமைக்கப்படும்.

04:41 PMமுதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்விகளில் முதலீடுகள்.

04:38 PMபிட்டிபனையில், உயர் தொழில்நுட்ப பூங்கா.

04:36 PMமுச்சக்கரவண்டி அதிகாரசபை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அது, போக்குவரத்து அமைச்சின் கீழ்​ கொண்டுவரப்படும்.

04:35 PMவெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வைத்திருப்போரிடமிருந்து, அனைத்து விமானநிலைங்கள் மற்றும் துறைமுகங்களில், அறவிடப்படும் வரியை மீள்பெறும் திட்டம் 2018 மே மாதம் 1ஆம் திகதி முதல், செயற்படுத்தப்படும்.

04:33 PMஐந்து வருடங்களுக்கு குறைந்த வாகனங்களுக்கு புதிய காபன் வரி

04:32 PMவாகன நெரிசலற்ற வீதிகளில் ஓடும் இலத்திரனியல் வாகனங்களுக்கு வரிக் குறைப்பு.

04:31 PMமதுர ஓயா மற்றும் கல் ஓயா ஆகிய பூங்காக்களை உயர் ரக சவாரி இடங்களாக மாற்றுவதற்க, 75 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

04:29 PMகோட்டை, நானு-ஓயா மற்றும் எல்ல ஆகிய புகையிரத நிலையங்கள், தொல்பொருள் இடங்களாக பிரகடனம்.

04:28 PMசுற்றுலாத் துறைக்கு தேவையான சில குறிப்பிட்ட உணவுகள் மற்றும் பானங்கள் மீது சுமத்தப்படும் கட்டணத் தீர்வுகள் அகற்றப்படும்