புதுக்குடியிருப்பு கேப்பாபுலவு வீதியில் விபத்து,பலர் காயம்

0
259

சண்முகம் தவசீலன்

புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாபுலவு செல்லும் வீதியில் 10ஆம் வட்டாரப்பகுதியில் விபத்து ஒன்று இன்று(9) காலை இடம்பெற்றது .

ஆடை தொழில்சாலைக்கு பெண்களை ஏற்றிசென்ற பேரூந்து எதிரே வந்த இராணுவ வாகனம் ஒன்றுக்கு விலத்தி வழிவிடும் போது வீதியின் அருகிலிருந்த மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது

இன்று காலை புதுக்குடியிருப்பிலுள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வற்றாப்பளை புதுக்குடியிருப்பு வீதியில் சென்றுகொண்டிருந்தவேளை எதிரே வந்த இராணுவ வாகனம் ஒன்றுக்கு விலத்தி வழிவிடும் போது வீதியின் அருகிலிருந்த மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பேரூந்தில் சென்ற பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுக்குள்ளாக்கிய நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.