கொக்கட்டிச்சோலை பிரதேசசபையில் தேசிய வாசிப்புமாத இறுதி நிகழ்வு

0
531

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாத இறுதி நிகழ்வு அண்மையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது, தேசிய வாசிப்பினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வானது பிரதேச சபையின் செயலாளர் திருமதி.கு.ஜோன்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ரவிச்சந்திரன், ஆய்வு உத்தியோகத்தர் எஸ்.ஜெகதீஸ்வரன், நூலக பொறுப்பாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சனசமூக நிலைய பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.