நள்ளிரவு முதல் ரயில்கள் ஓடாது

0
353

சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் சில ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளன.
ரயில்வே சாரதிகள் சங்கம் , ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் , ரயில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் சங்கம் ஆகியன இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வுகாணுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்திருந்த போது போக்குவரத்து அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து அந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது.
எனினும் இன்னும் கோரிக்கைக்கு தீர்வு காணப்படாதிருக்கும் நிலையிலேயே இன்றைய தினம் நள்ளிரவு முதல் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.