இரணைமடு பகுதியிலிருந்து வெளியேறியது இராணுவம்

0
367

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அருகில் நிலைகொண்டிருந்த இராணுவம்   அங்கிருந்து வெளியேறியுள்ளது.

நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான குறித்த பகுதியில்இ நீர்ப்பாசன திணைக்களத்தின் விடுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து இராணுவத்தினர் அங்கு நிலைகொண்டிருந்தனர்.

அத்தோடு இரணைமடு குளம் அமைந்துள்ள பகுதிக்கு சுற்றுலாவாக வருகை தரும் பிரயாணிகளுக்கு சிற்றுண்டிச் சாலை அமைத்து வியாபாரமும் செய்து வந்தனர்.

இதனால் அப்பகுதி மக்களின் வியாபார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு வந்ததோடு, இராணுவம் நிலைகொண்டிருந்த பகுதி நீர்ப்பாசன திணைக்களத்திற்கு மிகவும் அத்தியாவசியமாகவும் காணப்பட்டது.

இதுகுறித்து முன்னெடுக்கப்பட்டு வந்த ஆலோசனைகளின் பிரகாரம் இன்றைய தினம் அவ்விடத்திலிருந்து இராணுவம் வெளியேறியுள்ளது.

இனிவரும் காலத்தில் இரணைமடு குளப் பகுதிக்கு மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி செல்ல முடியும் என்பதோடுஇ தமது வர்த்தக நடவடிக்கைகளையும் முன்னெடுக்க ஏதுவாக இராணுவத்தின் வெளியேற்றம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.