பட்டிருப்பு கல்வி வலய சாரணர் தீப்பாசறை.

0
237

(பழுகாமம் நிருபர்)  மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சாரணர் மாணவர்களுக்கான சாரணர் பயிற்சி பாசறை திக்கோடையில் இடம்பெற்றது.

 
கடந்த 03ம்திகதி ஆரம்பமாகிய குறித்த பயிற்சி பாசறை, 05ம் திகதி வரையும் மாவட்ட உதவி சாரணர் ஆணையாளர் ஆ.புட்கரனின் தலைமையில் இடம்பெற்றது.

 
வலயத்திற்குட்பட்ட பத்து பாடசாலைகளைச் சேர்ந்த, 150சாரண மாணவர்களும், 15சாரண தலைவர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
இதன் போது சாரணமாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன், தீப்பாசறையும், கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.