கொழும்பு – யாழ்ப்பாணம் பேரூந்து விபத்து – பலியானவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்வு

0
456

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரன்குளி பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நபர்களில் மேலுமொருவர் உயிரிழந்துள்ளார்.

அதன்படி , இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் , 43 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர் காயமடைந்துள்ளதால் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.