கல்முனை வடக்கு நகரசபையொன்றே தீர்வு!கல்முனைத் தமிழ்த்தரப்பு தீர்மானம்

0
338
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கூறுகிறார்.
காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா.
 
கல்முனை தமிழ்மக்களின் ஏகோபித்த தீர்மானப்படி கல்முனை மாகரசபையை இரண்டாகப் பிரிப்பது. கல்முனைத்தரவைப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பெரியநீலாவணை ஈறாகவுள்ள பிரதேசத்தை கல்முனை வடக்கு நகரசபையாகவும் சாய்ந்தமருது கல்முனைக்குடி அடங்கலான பிரதேசத்தை கல்முனை தெற்கு  மாகநரசபையாகவும் பிரிப்பது என்று தீர்மானமாகியுள்ளது.
 
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் நேற்று (3)கல்முனையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்..
 
அம்பாறை அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் கல்முனை தமிழ்மக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளர் கந்தையா லவநாதன் தலைமையில் நடைபெற்றது. அதில் பாராளுமன்றஉறுப்பினர் கோடிஸ்வரன் முன்னாள்கிழக்குமாகாணசபைஉறுப்பினர் மு.இராஜேஸ்வரன் முன்னாள் கல்முனை மாகநரசபை எதிர்க்கட்சித்தலைவர்களான ஹென்றிமகேந்திரன் கு.ஏகாம்பரம் பிரதேசசெயலாளர் வி.ஜெகதீசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.அங்கு மக்கள் பிரதிநதிகளின் கருத்துக்கள் இருமணிநேரம் அறியப்பட்டு இறுதியில் திர்மனம் நிறைவேற்றப்பட்டது.
 
 
அத்தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று இரவு 7மணியளவில் நடைபெற்றது.
 
அதில் கோடீஸ்வரன் எம்.பி. கூறுகையில்:
கல்முனை தெற்கு மாகரசபையானது கல்முனைக்குடியிலிருந்து ஆரம்பித்து சாய்ந்தமருது எல்லைவரை கொண்டிருக்கும். வடக்குநகரசபையானது கல்முனைத்தரவைப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து நீலாவணை ஈறாகவுள்ள தமிழ்முஸ்லிம்சிங்கள மக்களைக்கொண்ட பிரதேசங்களை உள்ளடக்கியிருக்கும்.
 
இவ்வாறு இரு சபைகள் அமைப்பதில் ஏதாவது பிரச்சினைகள் எழும் பட்சத்தில் மாற்றுத்தீர்மானமொன்றை எடுக்க எமது தமிழ்த்தரப்பு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
அதாவது தற்போதைய கல்முனை தமிழ்ச்செயலகப் பிரிவின்கீழுள்ள கிராமங்களை மட்டும் இணைத்து கல்முனை தமிழ் நகரசபையை உருவாக்குதல்.
 
 
செய்தியாளர்மாநாட்டில் கருத்துத்தெரிவித்த முன்னாள் கல்முனை  மாகரசபையின் எதிர்க்கட்சித்தலைவர் ஹென்றிமகேந்திரன் கூறுகையில்:
 
கல்முனை என்பது வேறு கல்முனைக்குடி என்பது வேறு. இதனை அனைவரும் புரிந்தகொள்ளவேண்டும்.
கல்முனையில் 85வீத தமிழ்மக்களும் 15வீத முஸ்லிமக்ளும் உள்ளனர். ஆனால் கல்முனைக்குடியில் 100வீத முஸ்லிம்கள் மாத்திரமே உள்ளனர்.
கல்முனை நகரம் ஒரு வியாபார ஸ்தானமே தவிர குடியிருப்பல்ல. அங்குவந்து யாரும் கடைவைத்து வியாபாரம் செய்யலாம்.அதற்காக அது அவர்களுடையதாகிவிடாது.
நான் கொழும்பில்சென்று கடைவைத்தால் கொழும்ப என்னுடையதாகிவிடுமா? இல்லை.
முன்னர் கல்முனையை நான்கு உள்ளுராட்சிசபைகளாகப் பிரிப்பது தொடர்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டபோது நாம் பகிரங்கமாகவே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தோம். அது எவ்விதத்திலும் எமக்கு உடன்பாடில்லை.
சாய்நதமருதுக்கு தனியான பிரதேசசபை வழங்கப்படுவதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை. அதற்கு எமது தார்மீக பரிபூரண ஆதரவை வழங்கத்தயாராகவுள்ளோம்.
ஆனால் மிகுதிப்பரப்பை மூன்றுதுண்டுகளாப்பிரிப்பதென்பது தமிழ்மக்களை திட்டமிட்டு பிரிக்கச்செய்யும் சதி முயற்சியாகும். அதுமாத்திரமல்ல பாரம்பரியமாக கல்முனையில் வாழ்ந்துவரும் தமிழ்மக்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் ஒரு சதி முயற்சியாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.
 
சாய்நதமருது தனியாகப்பிரிக்கப்பட்டால் கல்முனை மாகநரசபை தமிழரின் கைக்குப்போய்விடுமென்று மற்றத்தரப்பினர் இனவாநச்சுவிதையைக் கக்கியுள்ளனர். உண்மையில் சாய்நதமருது பிரிக்கப்பட்டாலும் 60வீதம் முஸ்லிம்களும் 40வீதம் தமிழர்களும்தான் இருக்கப்போகின்றார்கள் என்பதனை அறியாமல் யாருமில்லை.
தற்போது சாய்ந்தமருது முஸ்லிம் சகோதரர்கள் தமது அரசியல் உரிமையை முனைப்பாக பேரணி நடாத்தி ஆகரோசமாகக் கேட்கமுற்படும்போது மீண்டும் கல்முனையை நான்காகப்பிரிக்கும் திட்டத்தை முன்வைத்து அவர்களது அரசியல் உரிமைக்கு சாவுமணி அடிக்கமுனைகிறார்கள்.
 
கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக விவகாரத்தில்…
கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரத்தில் சில முஸ்லிம் தலைமைகள் நடந்துகொள்ளும் முறைமையை உலகறியும். இவர்கள்தான் ஒற்றுமையைப்பற்றி மேடைகளில் வாய்கிழியக்கத்துவார்கள்.
ஆனால் பல தசாப்தங்களைத்தாண்டி உரிய அந்தஸ்து இல்லாமல் அல்லல்படும் பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கு முட்டுக்கடையாக உள்ளனர்.
இவர்களை நம்பி புதிய நகரஅபிவிருத்தித்திட்டம் கல்முனையை நான்காகப்பிரிக்கும் திட்டத்திற்கெல்லாம் துணைபோகலாமா?
 
இறுதியாக கல்முனைவாழ் தமிழ்மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வண்ணம் இடம்பெறும் எத்தகைய செயற்பாடுகளுக்கும் நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. அதற்காக எத்தகைய போராட்டத்தை முன்னெடுக்கவும் தயாராகவுள்ளோம்.
அதற்காக இந்த இருசபைகள் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். ஒத்து ஒற்றுமையாக சமாதானமாக இருக்க ஆசைப்படுகின்றோம். அதைப்புறந்தள்ளினால் தனித்துப்போக நேரிடும். என்றார்.
 
சபையில் முன்னாள் கல்முனை மாகநரசபை எதிர்க்கட்சித்தலைவர் கு.ஏகாம்பரம் உறுப்பினர் சிவ.ஜெயக்குமார் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.