உதவி வேண்டாம் எங்கட நிலத்தில் நாங்கள் விவசாயம் செய்ய அனுமதியுங்கள்…

0
370

‘எங்களுக்கு அரசு வழங்குகின்ற சமூர்த்தியும் வேண்டாம் வேறு உதவியும் வேண்டாம் எங்கட நிலத்தில் நாங்கள் விவசாயம் செய்ய அனுமதியுங்கள்.அங்கு அடாவடித்தனமாக செயற்படும் சில வன இலாக அதிகாரிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்துங்கள்’
எனஅம்பாறை மாவட்டம் திருக்கோயில் பிரதேசசெயலாளர் பிரிவில் பின்தங்கிய கிராமமான சாகாமத்தைச்சார்ந்த விவசாயசங்கத்தலைவி கோரிக்கைவிடுத்தார்..
நேற்று கல்முனை கிறிஸ்ரா இல்லகேட்போர் கூடத்தில் நடந்த ‘மக்கள் குறைகேள் மன்றம்’ நிகழ்வில் 20இற்கும்மேற்பட்ட அரச அதிகாரிகள் மத்தியில் இக்கோரிக்கையை விடுத்தார்.
அவர்மேலும் குறிப்பிடுகையில்,நான் விவசாயசங்கத்தின் தலைவியாகவும்,மாதர்சங்கத்தலைவியாகவும் செயற்படுகின்றேன்.
எமது சகாமம் கிராமத்தில் முன்னர் எமது காணிகளில் எஸ்ரி;எப். படைமுகாம் அமைத்திருந்தது. அவர்கள் பின்னர் போய்விட்டனர்.அந்தக்காணிகளுக்கு முன்னர் சந்திரிகா அம்மையார் மூலம் வழங்கப்பட்ட உறுதிகள் உள்ளன. நாம் அண்மையில் அங்கு சென்று காணப்படும் சிறியரக பற்றைகளை துப்பரவுசெய்து விவசாய நடவடிக்கையை தொடர முயற்சிக்கின்றவேளை அங்கு வரும் சில வன இலாக அதிகாரிகள் விடுகிறார்கள் இல்லை.
குறிப்பாக ஒரு அதிகாரி மாலை நேரங்களில் மதுபோதையில் வந்து எம்மைத்தடுப்பதுடன் குறித்த உறுதியைக்காட்ட அதனைக்கணக்கில் எடுக்கிறார் இல்லை. எமது சங்கத்தைச்சார்ந்த பல பெண்களுக்கு பல வழக்குகளையும் பதிவு செய்து அடவாடியாக செயற்படுகின்றார்.
நாங்கள் பெரும் அழிவுகளையும் துயரங்களையும் இழப்புக்களையும் சந்தித்தனாங்கள்.நிறையபேர் விதவைகளாக்கப்பட்டு நிறைந்த துன்பங்களை அனுபவித்து விட்டோம்.
எமக்கு சமூர்த்தியும் வேண்டாம் வேறு உதவியும் வேண்டாம் தற்போது தான் நாம் ஓரளவு பெருமூச்சு விடுகின்றோம்.எமது பாராம்பரிய தொழிலை நாம் எமது காணிகளில் செய்ய நடவடிக்கை எடுங்கள்.முறைகேடாக நடக்கும் இவ்வதிகாரி யை க்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் நேர்மையாக சேவையாற்றக்கூடிய அதிகாரிகளை நியமியுங்கள். நான் தலைவி என்ற வகையில் எனது பாதிக்கப்பட்ட மக்களுக்காவே இதனை நான் சொல்கிறேன் இதற்கு ஒரு நல்லதொரு முடிவெடுத்து தாருங்கள். எனவும் சுட்டிக்காட்டினார்.;
இதற்குப்பதிலளித்த கல்முனைப் பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குளு அதிகாரி ஏ.எல்.இசட்டின் குறிப்பிடுகையில், வன இலாக அதிகாரிகள் அங்கிருக்கும் மக்களுடன் அல்லது பெண்களுடன் மோசமாக நடந்துகொண்டமை தொடர்பான குற்றச்சாட்டைப்பொறுத்தவரை நீங்கள் முதலாவதாக உடன் அங்குள்ள பொலிஸ்நிலயத்தில்முறைப்பாடு ஒன்றைப்பதிவு செய்யுங்கள். அவ்வாறு முறைப்பாட்டை பொலிஸ் எடுக்காத சந்தர்பம் இருந்தால் உடன் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.முறைப்பாட்டைபதிவு செய்தபின்னர் எமக்கும் எழுத்து மூலமாக அறியத்தாருங்கள் அதுபற்றிய மேலதிக விசாரணைகளை நாம் மேற்கொள்வோம்.
உங்களுடைய காணி விடயத்தைப்;பொறுத்தவரை உங்களிடம் சட்ட ரிதியான ஆவணம் இருக்குமாக விருந்தால் நீங்கள் ஒரு முறைப்பாட்டை எழுதி அதனுடன் உங்களது காணி ஆவணத்தையும் பிரதி செய்து அவற்றையும் இணைத்து எமது அலுவலகத்தில் ஒப்டையுங்கள் .உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விசாரணைகளைச்செய்து நாம் நடவடிக்கைகளை எடுப்போம்.
நாம் அண்மையில் வன இலாகவிற்கு சொல்லியுள்ளோம். ஒரு இடம் யுத்தம் காரணமாக 20வருடங்களுக்கு மேலாக விடுபடுமாக விருந்தால். அங்கு சிறிய காடு, ,பத்தைகள் மரங்கள் வளர்ந்திருக்கும் நிரந்தரமாக காடாக இருக்கும் காட்டிற்கும் இடையில் இவ்வாறு மக்கள் இடம்பெயர்ந்திருந்து வளர்ந்த பற்றைக்காட்டிற்குமிடையில் வித்தியாசமிருக்கும் எனவே இவைற்றைப்பிரித்துபாரத்து அணுகுமாறும் பரிந்துரை செய்துள்ளோம். எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வு மனித உரிமைகள் ஆணைக்குளுவின் கல்முனைப்பிராந்திய அலுவலகம்,இளைஞர் அபிவிருத்தி ‘அகம்’;,மற்றும் அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு போன்ற அமைப்புகளின் கூட்டு ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சார்பாக திருக்கோயில் பிரதேச செயலாளர் சி.ஜெகராஜன் தலமையிலான 20இற்கும்மேற்பட்ட துறைசார் அதிகாரிகளும் 184 கிராமிய பொதுமக்கள பிரதிநிதிகளும்; சிவில் அமைப்புபிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்
இங்குகிராம மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வு நடவடிக்கைளை அரச அதிகாரிகளும் பிராந்திய மனித உரிமைகள்ட ஆணையாளரும் முன்வைத்தனர்.இந்நிகழ்வின்விளக்கவுரையை அகம் அமைப்பின் மாகாண இணைப்பாளர் பொ.சற்சிவானந்தம் நிகழ்தினார் வரவேற்புரையை அம்பாறை மாவட்ட பெண்கள்வலையமைப்பின் இணைப்பாளர் க.கலைவாணி நிகழ்த்தினார்.