முல்லைத்தீவில் தொழிற்சந்தை (முல்லை விடியல் II)

0
533

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், பெரெண்டினா நிறுவனம் என்பன ஏற்பாடு செய்துள்ள முல்லை விடியல் – II  மாபெரும் தொழிற்சந்தை எதிர்வரும் 04.11.2017 அன்று காலை 09.00 மணிமுதல் பி.ப 01.00 மணிவரை ஒட்டு சுட்டான் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது..
அன்றைய தினம் 15 முன்னணி தொழில் தருனர்கள் 800க்கு மேற்பட்;ட தொழில் வாய்ப்புக்களுடன் வருகை தரவிருப்பதோடு. தரம் 08 முதல் பல்கலைக்கழக பட்டதாரிகள் வரை பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை அன்றைய தினம் பெற்றுக்கொள்ளலாம்.
இத்தொழில் வாய்ப்புகளை எமது இளைஞர் யுவதிகள் கையகப்படுத்தும் முகமாக, அவர்களை தயர்படுத்தும் செயலமர்வு 03.11.2017 (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணிக்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
எனவே தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் இளைஞர் யுவதிகள் இவ்விரு தினங்களும் பங்குப்பற்றி தமக்கு பொருத்தமான தொழில் வாய்பொன்றை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றாம்.
தொடர்புகளுக்கு 077 4440267