தாந்தாமலையில் மரநடுகை

0
584

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தாந்தாமலைப் பகுதியில் நிழல் மரம் நடும் நிகழ்வு நேற்று(31) இடம்பெற்றது.
இயற்கையை பாதுகாக்கும் நோக்கிலும், நிழலினை ஏற்படுத்தும் பொருட்டும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினால் 100வாகை மரங்கள் இதன் போது நடப்பட்டன.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, மரத்தினை நட்டு வைத்தனர்.