தாந்தாமலை காட்டுப்பகுதில் இருந்து சடலம் மீட்பு

0
531
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை காட்டுப்பகுதிக்குள் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று(01) மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம், அரசடித்தீவு கிராமத்தினையைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான க.இராசரெத்தினம் என இனங்காணப்பட்டுள்ளது.
அரசடித்தீவு கிராமத்தினைச் சேர்ந்த குறித்த நபர், தாந்தாமலையில் மேட்டுநிலப்பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்றைய தினம்(31) சிறிய கம்புகள் வெட்டுவதற்காக தாந்தாமலைப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்றிருக்கின்றார். அவ்வாறு சென்றவர் நேற்றிய தினம் மாலை வரை இல்லிடத்திற்கு வருகை தராத நிலையில் உறவினர்கள் தேடியிருக்கின்றனர். இந்நிலையிலே இன்று காலை 6மணியளவில் தாந்தாமலையின் காட்டுப்பகுதிக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கையில் கத்தியுடனும், அருகில் கம்புகள் காணப்பட்ட நிலையிலே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.