தெருவழியில் வெளிநாட்டு மோகம்

0
1101

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் உள்ள கிராமங்கள் தோறும் வெளிநாட்டு மோகம் எனும் தலைப்பிலான தெரு நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நாடகத்தின் இரண்டாவது ஆற்றுகையானது மாவடிமுன்மாரியில் இன்று(01) நிகழ்த்தப்பட்டது.
வேள்விசன் நிறுவனத்தின் அனுசரணையில், பட்டிப்பளைப்பிரதேச கட்டியம் ஆற்றுகைக் குழுவினரால் இத்தெரு நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டு வருகின்றது.

 

இதனை இ.குகநாதன் நெறியாழ்கை செய்திருந்தார்.
முறையான தொழில் பயிற்சியொன்றினை பெற்று, வெளிநாடு செல்வதே நன்மை பயக்கும் என்பதனை கருவாக கொண்டு இந்நாடகம் ஆற்றுகை செய்யப்படுகின்றது.

குறித்த பிரதேசத்திலிருந்து அதிகளவானவர்கள் தொழிலுக்காக மத்தியகிழக்கு நாடுகளுக்கு செல்லுகின்ற நிலையிலும், தொழில்பயிற்சி பெற்று சான்றிதழ்களுடன் வெளிநாடு செல்லாமையினால் பல்வேறு பிரச்சினைகளுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

இதனைக் குறைக்கும் வகையில் இந்நாடகம் ஆற்றுகை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.