மாவடிமுன்மாரியில் சந்தோசப்பொழுது

0
299

(படுவான் பாலகன்) சிறுவர்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு, மாவடிமுன்மாரியில் சந்தோப்பொழுது நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
பட்டிப்பளைப்பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும் உதவி நண்பர்களின் உதவியுடனும் நடைபெற்றுவருகின்ற கதைசொல்லல் திட்ட மாணவர்கள் இந்நிகழ்வினை ஒழுங்கு செய்து நடாத்தினர்.
குறித்த மாணவர்களினால் வரையப்பட்ட சித்திரங்களும், கைவினைப்பொருட்களும் இதன்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அதே போன்று மாணவர்களினால் பல்வேறு நிகழ்வுகளும் செய்யப்பட்டதுடன், தங்களால் தமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பிலும் கூறினர்.
மரநிழலில் இயற்கை கொண்டு அலங்கரங்கப்பட்ட சூழலிலே இந்நிகழ்வு, நடாத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதுடன், மாணவர்களின் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது பிள்ளைகளின் திறமைகளை கண்டு மகிழ்ந்தமையும் காணமுடிந்தது.