மாணவி வாந்தி எடுத்த சம்பவம் – அதிபர் இடைநிறுத்தம்

0
476

ஹெக்கிராவ கல்வி வலயத்தில் மடாட்டுகம றேவத்த என்ற வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்ற மாணவி கர்ப்பிணி என்ற குற்றச்சாட்டில் வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரை பதவியிலிருந்து இடைநிறுத்த தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவி தனது கல்வி நடவடிக்கையை தொடர மாகாணத்தில் பாடசாலை ஒன்று கிடைக்கவில்லையாயின் அதற்கான பொருத்தமான தேசிய பாடசாலையொன்றை அவர் மற்றும் அவரின் பெற்றோரின் விருப்பத்திற்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

 

இந்த தீர்மானத்தை நடைமுறைப்படு;த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

பொருளாதார ரீதியில் இந்த மாணவி சிரமங்களை எதிர்கொள்வாராயின் அதற்கு தீர்வாக தங்குமிட வசதிகளுடன் கூடிய பாடசாலை தேவைப்படும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.