வடக்கின் அடுத்த முதல்வராவதற்கான முழு தகுதியும் மாவைக்கு

0
208

வட மாகாணசபையின் அடுத்த முதலமைச்சராவதற்கான முழு தகுதியும் மாவை சேனாதிராஜாவிற்கு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக் கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டிருந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், வடக்கிற்கான முதலமைச்சர் வேட்பாளராக சிலவேளை நான் போட்டியிடக் கூடிய சூழல் உருவாகலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.