கிழக்கு மாகாண கூத்துப்போட்டி முடிவுகள்

0
602

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை(28) இரவு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் பாரம்பரிய கூத்துப்போட்டிகள் நடைபெற்றன.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வளர்மதி ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற கூத்துப் போட்டியில் வடமோடிக் கூத்துக்கள் மூன்றும் தென்மோடிக்கூத்துக்கள் மூன்றும் கலந்து கொண்டிருந்தன. இதில் அம்பாறை மாவட்டத்திலிருந்து கலந்து கொண்டிருந்த விஸ்ணுபுத்திர வெடியரசன் கூத்து வடமோடியில் முதலிடத்தினையும் விளாவெட்டுவான் கலைக்கிழகத்தின் கர்ணன் சண்டை இரண்டாம் இடத்தினையும், மகிழடித்தீவு கலைக்கழகத்தின் சுபத்திரை கல்யாணம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. தென்மோடியில் முதலிடத்தினை விளாவெட்டுவான் கலைக்கழகத்தின் சூரசங்காரமும், இரண்டாம் இடத்தினை கொக்கட்டிச்சோலை கலைக்குழுவின் மார்க்கண்டேயர் கூத்தும், மூன்றாம் இடத்தினை மகிழடித்தீவு அல்லி நாடகமும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.