மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலையை நிர்ணயிப்பதற்கு புதிய விலை சூத்திரம்

0
438

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையை நிர்ணயிப்பதற்கான புதிய விலை சூத்திரம் அடுத்த வருடம் அறிமுகப்படுத்தப்படுமென்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று நடைபெற்ற கொழும்பு கப்பல் உரிமையாளர்களின் கல்வி பீடத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2020ம் ஆண்டளவில் நாட்டின் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய முதலீடுகளுக்காக வரும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கூடுதலான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் திரு.குமாரசுவாமி சுட்டிக்காட்டினார்.
இதற்காக எரிபொருள் மற்றும் மின்சாரத்தை குறைந்த செலவில் வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.