மழை அல்லது இடியுடன் கூடிய மழை – மக்கள் பாதுகாப்பாக இருக்கவும்

0
160

நாட்டில் பிற்பகல் வேளைகளில் மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகம் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடைபருவ பெயர்ச்சி மழை ஆரம்பமாகின்றமை இதற்கான காரணமாகும்.

 

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 

தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் காலைவேளைகளில் ஓரளவு மழைபெய்யும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

சில இடங்களில் குறிப்பாக மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் 75மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

 

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.