கொழும்பில் பழங்கள் வாங்குபவர்கள் அவதானம்

0
279

கொழும்பு கோட்டை, புறக்கோட்டை பிரதேசங்களில் பழ வகைகளை கொள்வனவு செய்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நுகர்வோர் அதிகார சபை மக்களை கேட்டுள்ளது.

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பழவகைகளை விற்பனை செய்ய தயாராக இருந்த வர்த்தகர்கள் நேற்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

 

இதுவரை, நுகர்வோர் அதிகார சபை  18 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்களை இந்த வருடத்தில்  மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.