ஜனவரி 27ல் உள்ளுராட்சி தேர்தல்

0
305

உள்ளூராட்சித் தேர்தல்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

 

இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் நிறைவில் சற்று முன் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தும் தினம் குறித்து இழுபறி நிலை தொடர்ந்துவந்த நிலையில், அதற்குத் தீர்வுகாணும் வகையில் இந்தத் திகதியில் நடத்த கட்சித் தலைவர்கள் சம்மதித்துள்ளனர்.

முன்னதாக, தேர்தலை ஜனவரி மாதம் நடத்துவதெனத் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் திகதி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.