எதிர்ப்புக்கு மத்தியிலும் எதனோல் உற்பத்தி நிலையம்

0
492

மக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் மட்டக்களப்பு – கல்குடாவில் எதனோல் உற்பத்தித் தொழிற்சாலையின் நிர்மாணப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

டபிள்யூ.எம்.மென்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான உற்பத்தி தொழிற்சாலை கல்குடாவில் நிர்மாணிக்கப்படுகிறது.

கல்குடா மதுபான தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு வலியுறுத்தி பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

கல்குடாவில் நிர்மாணிக்கப்படும் மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கு அருகில் ஊடகவியலாளர் இருவர் கடந்த 21ஆம் திகதி தாக்கப்பட்டிருந்தனர்.

இது குறித்து அரசியல்வாதிகளும் பல தடவைகள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இதற்கு முன்னர் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியிருந்தும் கல்குடா மதுபான தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.

கல்குடா மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் நிர்மாணப் பணிக்காக ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் தமக்கான கொடுப்பனவுகளை செலுத்தவில்லையெனத் தெரிவித்து ஊழியர்கள் அண்மையில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

newsfirst