மட்டக்களப்பில் கொந்தளிக்கும் தமிழர்கள்

0
1643

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களை தரம் உயர்த்துதல், மற்றும் புதிதாக ஸ்தாபித்தல் தொடர்பான கருத்துக்களை பெற்றுக்கொள்ளல் சம்பந்தமான அறிவித்தல் தொடர்பாக மட்டக்களப்பு தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதுடன், கொந்தளிப்பு நிலையும் ஏற்பட்டுள்ளது. இச் செயற்திட்டமானது மக்கள் மத்தியில்இனவிரிசலை ஏற்படுத்துமோ என்ற அச்சநிலையும் மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ளது.

தமிழர் பிரதேசங்களை 100% முஸ்லிம்களின் ஆட்சி பிரதேசத்தில் உள்வாங்குவதாகவும் இன ரீதியாக தமிழர்களை ஓரம் கட்டும் முயற்சியாகவும் இம்முன்மொழிவுகள் உள்ளதனால் இம்முன்மொழிவுகளை மட்டக்களப்பு தமிழ் மக்கள் வன்மையாக கண்டிப்பதாக பொது அமைப்புக்களும் சமுகஆர்வலர்களும் சமுக வலைத்தளங்களிலும் whats app,viber குழுக்களிலும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

மேற்கொண்டு அரசியல் பலத்தை கொண்டு இவற்றை சாதிக்க முனைந்தால் மக்களினால் வெகுசன போராட்டங்கள், சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அமைதி சீரழிந்து கலவரம் ஏற்படலாம். வீண் பிரச்சனைகள் இனங்களுக்கிடையிலான இனமுறுகல், சண்டைகள் என்பன ஏற்பட்டு ஒட்டுமொத்தமாக இன நல்லுறவிற்கான கதவுகள் அடைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில்

கோறளைப்பற்று மத்தி எனப்படுவது யுத்தகாலத்தில் மக்களுக்கு சேவை வழங்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட சட்டரீதியற்ற ஒரு தற்காலிக ஏற்பாடாகும். இது தொடர்பான முன்மொழிவானது அரசியல் இலாபம் கருதியே முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் யுத்த காலத்திற்கென ஏற்படுத்தப்பட்ட இத்தற்காலிக அமைப்பானது யுத்தம் நிறைவடைந்து தற்போது நிலவுகின்ற நல்லாட்சி அரசாங்கத்தின் சமாதான சூழலில் தேவையற்றது. கோறளைப்பற்று மத்தியில் காணப்படுகின்ற பகுதிகள் ஆரம்பத்தில் யுத்தத்திற்கு முன்னர் எவ்வாறு இருந்ததோ தொடர்ந்து அவ்வப்பகுதிகளோடு இணைந்திருத்தல் பொருத்தமானது.

காத்தான்குடி மாநகரசபை / நகரசபை:

மேற்படி முன்மொழிவின் மூலம் தற்போது காணப்படுகின்ற காத்தான்குடி நகரசபையினை பிரித்து அதே மக்கட்தொகை மற்றும்   அதே நிலப்பரப்பிற்குள் மாநகரசபை, பிரதேச சபைகளை உருவாக்குவதெனில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் விடயமாகும்.

ஆனால் மேற்படி நகரசபையை பிரித்து புதிய மாநகரசபை மற்றும் பிரதேச சபை   ஒன்றை உருவாக்கும் போது, தற்போதைய மட்டக்களப்பு மாநகரசபையின் நிலப்பரப்பு, மக்கட்தொகை தற்போதைய மண்முனைப்பற்று பிரதேச சபையின் (ஆரையம்பதி) நிலப்பரப்பு மற்றும் மக்கட் தொகையையோ துண்டாடினால் அது ஏற்றுக்கொள்ளப்படமுடியாது.

இவ்வாறு நடக்கின்ற சந்தர்ப்பத்தில் பிரதேச மக்கள் கோபமடைந்து பலவித போராட்டங்கள், சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அமைதி சீரழிந்து கலவரம் ஏற்படலாம். வீண் பிரச்சனைகள் இனங்களுக்கிடையிலான இனமுறுகல், சண்டைகள் என்பன ஏற்பட்டு ஒட்டுமொத்தமாக இன நல்லுறவிற்கான கதவுகள் அடைக்கப்படலாம் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது..