பட்டமோ, டிப்ளோமாவோ இல்லாதவர்களுக்கு கல்வித்துறையில் இடமில்லை

0
2996

பட்டப்படிப்போ அல்லது குறைந்தபட்சம் டிப்ளோமா சான்றிதழ் தகுதி கூட இல்லாதவர்கள் எதிர்காலத்தில் கல்வித்துறையில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். டிப்ளோமா பட்டதாரிகளுக்கான பணி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று (20) பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.