கிழக்கின் இளம் விஞ்ஞானி

0
461

இலங்கை கண்டுபிடிப்பாளர் என்ற அரச அந்தஸ்தை சம்மாந்துறை கோரக்கர்கோயில்
கிராமத்தைச்சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் சோமசுந்தரம்   வினோஜ்குமார்
பெற்றுக்கொண்டார்.

கொழும்பில் வைத்து இவ்விருது கிழக்கைச்சேர்ந்த ஒரு தமிழ்
மாணவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை கோரக்கர்
தமிழ்மகாவித்தியாயலயத்திலும் சம்மாந்துறை முஸ்லிம் தேசிய கல்லூரியிலும்
பயின்ற இவர் தற்போது யாழ் பல்கலைக்ககழகத்தின் தொழினுட்பபீடத்திற்குத்
தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவும் விஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி
அமைச்சினால் 2017 ஒக்டோபர் 16ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு
மண்டபத்தில் ”ளுசi டுயமெய நேஒவ-டீடரந புசநநn நுசய’ ‘  எனும் மாநாட்டில்
விஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில்பிரேம ஜெயந்த வழங்கி
வைத்தார்.

அனைத்து அரச ஆராய்ச்சி அலுவலகங்களிலும் இலவசமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்
இலவச அரச போக்குவரத்து வசதிகள் இலவச மருத்துவசேவை உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டு விஞ்ஞான கண்காட்சிஇ போட்டிகள் பங்குகொள்வதற்கான வசதிகள்
மேலும் கண்டுபிடிப்புக்களை வர்த்தக மயப்படுத்துவதற்கான உதவிகள்
வழங்கப்படவுள்ளன.

இதற்கு முன்னர் தேசிய விஞ்ஞான மன்றத்தில் விஞ்ஞான ஆராய்ச்சியாளராகவும்
தேசிய விஞ்ஞான மற்றும் தொழினுட்ப ஆணைக்குழுவினால் இளம் விஞ்ஞானி என்ற அரச
அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.