உற்பத்தி திறன் போட்டியில் வருடாந்தம் விசேட பாராட்டு பெறும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபை

0
1078

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணம் மற்றும் தேசிய ரீதியாக நடாத்தப்படுகின்ற உற்பத்தி திறன் போட்டியில் மண்முனை தென்மேற்கு பிரதேசசபை 2013ம் ஆண்டிலிருந்து வெற்றியீட்டி வருகின்றதாக சபையின் செயலாளர் குமுதா ஜோன்பிள்ளை தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தினால் 2016ம் ஆண்டிற்காக நடாத்தப்பட்ட உற்பத்தி திறன் போட்டியில் வெற்றிபெற்ற திணைக்களங்களுக்கான சான்றிதழ் மற்றும் நினைவு சின்னம் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் திருகோணமலையில் நடைபெற்றது. இதில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கு விசேட பாராட்டு கிடைக்கப்பெற்றது. இதே போன்று 2013, 2015 ஆகிய ஆண்டுகளிலும் மாகாணத்தில் விசேட பாராட்டு குறித்த பிரதேச சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதேபோல தேசிய ரீதியிலும் 2014, 2015 ஆகிய ஆண்டுகளிலும் விசேட பாராட்டு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.