தாய், மகன் கொலை ; 5 பேர் கைது,

0
949

மட்டக்களப்பு, ஏறாவூர் சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பாக இதுவரை 5  பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் தடயப்பொருள் ஒன்றும் மீட்டுள்ளதாக  ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தெரிவித்தள்ளார்.

 

ஏறாவூர்  முருகன் கோவில் வீதி சவுக்கடியில் உள்ள வீடொன்றில் 26 வயதுடைய தாயும் 11 வயதுடைய மகனும் நேற்றுக்காலை சடலங்களாக பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தனர்.

 

கொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் இருந்து 125  மீற்ரர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் உடைந்த கோடரி  ஒன்று இன்று  காலை  பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

 

குறித்த கொலை தொடர்பான தீவிர விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.