கொக்கட்டிச்சோலை பகுதியில் விபத்து : ஒருவர் பலி

0
706

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் இன்று(19) மதியம் இடம்பெற்றுள்ளது.
கடுக்காமுனைப்பகுயிலிருந்து சென்ற உழவு இயந்திரமும் அம்பலத்தடிபகுதியிலிருந்து வருகைதந்த மோட்டார் சைக்கிளும் மோதியதிலே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.
விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில், அம்பிளாந்துறையைச் சேர்ந்த சிவஞானம் நித்தியானந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பிலான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.