கிராமசேவை உத்தியோகத்தரின் சடலத்தின் மீள்பிரேத பரிசோதனை பிற்தள்ளிவைப்பு : சட்டவைத்திய அதிகாரி சமூகம்கொடுக்காமையே காரணம்

0
382
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added
(கமல்) மர்மமான முறையில் மரணமடைந்த கிரமசேவை உத்தியோகத்தர் சோமசுந்தரம் விக்னேஸ்வரனின் சடலத்தின் மீள்பிரேத பரிசோதனை பிரதம சட்டவைத்திய அதிகாரி சமூகம்கொடுக்காமை காரணமாக பிற்போடப்பட்டுளளது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் கிராமசேவை உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த நிலையில் கடந்த 2016.04.05 ஆம் திகதி அன்று எருவிலில் வைத்து மர்மமான முறையில் மரணமடைந்திருந்தார். குறித்த மரணம் தொடர்பில் சந்தேகத்தின் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது கிரமசேவை உத்தியோகத்தர் சார்பாக ஆஜராகியிருந்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியும் சட்டதரணியுமான வி.சந்திரமணி அவர்களின் சமர்பணத்தையடுத்து பிரேதத்தினை மீள்பிரதே பரிசோதனை மேற்கொள்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய 19.10.2017 திகதி (இன்று)வியாழக்கிழமை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தது.
குறித்த மீள்பிரேத பரிசோதனையை நடாத்துவதற்கு கொழும்பில் இருந்து வருகைதரவிருந்த பிரதம சட்டவைத்திய அதிகாரி அஜித்தென்னக்கோன்    மட்டக்களப்பு சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேதத்தினை தோன்றி எடுத்து பிரேத பரிசோதனைக்காக  கொழும்புக்கு பிரேதத்தை அனுப்பிவைக்குமாறு நீதி மன்ற பதிவாளருக்கு  கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார்.
கொழும்புக்கு பிரேதத்தினை அனுப்பிவைப்பதில் பலதரப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாக கிரமசேவை உத்தியோகத்தர் சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார். இதனையடுத்து முதலில் மட்டக்களப்பு சட்டவைத்திய அதிகாரிக்கு பிரதம சட்டவைத்திய அதிகாரியினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலை   எதிவர் 23.10.2017 திங்கட் கிழமை கேட்டறிந்து கொள்வதாக நீதிமன்று தீர்மானித்துள்ளதாகவும் இதன் பின்னரே குறித்த சடலத்தினை மீள்பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்கான திகதி தீர்மானிக்கப்படும் என சட்டத்தரணி இதன்போது தெரிவித்தார்…