சோமாலிய குண்டு வெடிப்பில் 300 இற்கும் மேற்பட்டோர் பலி

0
177

சோமாலியாவின் தலைநகரான மொகடிசுவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியானோரின் தொகை 300 ஆக அதிகரித்துள்ளது. இக்குண்டு தாக்குதலில் 300 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலியானோரின் தொகை மேலும் அதிகரிக்கலாமென அதிகாரிகள் தெரிவித்தனர். 2007 ஆம் ஆண்டு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு தோன்றியதிலிருந்து சோமாலியாவில் இடம்பெற்ற மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதலை தொடர்ந்து சோமாலிய ஜனாதிபதி மொஹமட் அப்துல்லாஹி பர்மஜோ 3 நாட்கள் துக்க தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். இத்தாக்குதலுக்கு இதுவரை யாரும் உரிமைகோரவில்லை. அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம் இத்தாக்குதலை மேற்கொண்டிருகக்லாமென அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.