பரீட்சையை தாமதிக்காது நடாத்துமாறு விண்ணப்பதாரிகள் கோரிக்கை

0
226

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் அண்மையில் கோரப்பட்ட நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் பயிற்றப்பட்ட ஆசிரியர் தரம் 3க்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தன. ஆனால், இரண்டரை மாதங்கள் கடந்த நிலையில் இது வரைக்கும் போட்டிப் பரீட்சைக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என, கிழக்கு மாகாண விண்ணப்பதாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் விண்ணப்பதாரிகள் தெரிவிக்கையில்,

இந்தப் பரீட்சைக்குப் பின்னர் கோரப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பரீட்சைகள் முடிவுற்ற நிலையில், தங்களுக்கான போட்டிப் பரீட்சை இன்னும் நடைபெறவில்லை. இப்போட்டிப் பரீட்சைக்கான முடிவு திகதி, 2017.07.25 என, கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டிருப்பதும் பரீட்சையின் தாமதத்துக்கு காரணமாக இருக்கலாம். ஆதலால், இப்பரீட்சையை விரைவில் நடாத்த கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட்ட சம்மந்தப்பட்ட தரப்புகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதுடன், போட்டிப் பரீட்சையை நடாத்தி நியமனத்தை வழங்க வேண்டும் என, கிழக்கு மாகாண விண்ணப்பதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.