போராட்டத்திலிருந்து ஒதுங்கிய பின்னர் சட்டத்திற்கு முறணான பிரதேசங்களிலோ நாடுகளிலோ நான் இருக்கவில்லை

0
389

(டினேஸ்) போராட்டத்திலிருந்து ஒதுங்கிய பின்னர் சட்டத்திற்கு முறணான பிரதேசங்களிலோ நாடுகளிலோ நான் இருக்கவில்லை என்பது தெளிவான விடையம் என்கின்றார் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயக மூர்த்தி முரளிதரன்……..

கட்சியின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதெ அவர் இவ்வாறு தெரிவித்தார்…

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்……….

1) கேள்வி – போராட்டத்திலிருந்து ஒதுங்கிய பின்னர் நீங்கள் இந்தியாவில் இருந்தீர்கள் என கூறுகின்றனர் இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

பதில் –
போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்த பின்னர் தலைமறைவாகியிருந்தமை உண்மை ஆனால் இந்தியாவில் இருந்தது என்பது தவறான விடயம் உண்மையிலேயே நான் சட்டத்திற்கு முறணான பிரதேசங்களிலும் நாடுகளிலும் தங்கியிருக்கவில்லை. இருந்த இடங்கள் இரகசியம் பேணப்பட வேண்டிய விடையங்கள்.

2) கேள்வி –
வடகிழக்கு இணைப்பு தொடர்பான கருந்து?

பதில் –
வடகிழக்கு இணைப்பு என்பது எமது கட்சியின் அடிப்படை கோட்பாடு அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை நான் தேசிய கட்சியில் இருந்த போது அக்கட்சியின் இக்கொள்கைகள் உள்வாங்கப்படவில்லை அதனால் தான் எனது பதவியை தூக்கி எறிந்து விட்டு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் கட்சியை ஆரம்பித்து வடகிழக்கு இணைப்பு என்பதை முன்மொழிந்துள்ளோம்.

தமிழரது பாரம்பரிய பிரதேசம் நிச்சயமாக இணைக்கப்பட வேண்டும் அதில் வடகிழக்கு இணைக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்கள் தரமுயர்த்தப்பட வேண்டும் கல்வி , பொருளாதாரம் அபிவிருத்திகள் பின்தங்கியுள்ளது அதனை முன்கொண்டுவர வேண்டும் காரணம் வடக்கில் உள்ள அதிகமான மக்கள் புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்றனர் ஆனால் கிழக்கில் 2% வீதமான மக்கள் மட்டுமே புலத்தில் உள்ளனர் வடக்கில் உள்ளவர்கள் செல்வந்தர்களாகவும் புத்திஜீவிகளாகவும் வாழ்கின்றனர். அவர்களைப் போல் கிழக்கிலும் பாரிய அபிவிருத்திகள் கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் கொண்டுவர வேண்டும் நான் அமைச்சராக இருந்த போது கல்வி, பொருளாதாரம், வைத்தியத்துறை போன்ற இன்னும் பல பிரிவுகளில் பாரிய அபிவிருத்திகளை கொண்டுவந்தேன் அதேபோல் இனிவரும் காலங்களிலும் கிழக்கு மாகாணத்தை பொருத்தவரையிலான அபிவிருத்தியை உரிய முறையில் கொண்டுவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயக மூர்த்தி முரளிதரன் கருத்துத் தெரிவித்தார்.

இதன் போது மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழான மாதுரு ஓயா வலது கரை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்ட தமிழர்களின் விவசாய காணிகள் பாரிய அளவு பறிமுதல் செய்தல் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 3/4 பங்கு பிரதேசங்கள் நிச்சயமாக பறிபோகும் நிலை உள்ளது என்பதோடு இதனை தடுக்கும் நடவடிக்கையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியும் ஆதரவாளர்களும் கட்சி உறுப்பினர்களும் மிகவும் முன் ஏற்பாடாக தடுப்பு நடவடிக்கையில் களமிறங்கியுள்ளதாகவும் திட்டமிடப்பட்டு தமிழர் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யப்படும் சூழ்ச்சிகள் சம்பந்தமாகவும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

இவ்வூடக சந்திப்பின் போது கட்சியின் செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ், பொருளாளர் என்.உதயகுமார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான எஸ்.வசந்தன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.