இந்து மக்களுக்கான காணி இந்து மக்களிடமே கையளிப்பு

0
222
மூதூர் இந்து மக்களுக்கு சொந்தமான இந்து இளைஞர் மன்றத்தின் காணி சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்கு அமைய பொலிசாரால் இக்காணியை மீண்டும் இந்து இளைஞர் மன்றத்திற்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளது.
மூதூர் இந்து இளைஞர் மன்றத்தின் ஸ்தாபச் செயலளரும் இளைஞர் அபிவிருத்தி அகத்தின் இணைப்பாளருமான பொ.சற்சிவானந்தம் 5.10.2017 பொலிசில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய  13.10.2017  காலை 10 மணியளவில் பொலிசாரினால் மேற் கொள்ளப்பட்ட விசாரனைக்கு அமைவாக இக்காணி மீண்டும் மன்றத்திற்கே வழங்க பொலிசார் நடவடிக்கை மேற் கொண்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மூதூர் இந்து இளைஞர் மன்றத்தின் ஸ்தாபச் செயலளரும் இளைஞர் அபிவிருத்தி அகத்தின் இணைப்பாளருமான  பொ.சற்சிவானந்தம் அவர்களிடம் கேட்டபேது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
மூதூர் இந்து இளைஞர் மன்றத்திற்கு சொந்தமான காணி 80 பேர்ச் மூதூர் முத்தவெளிக்கு அருகில் உள்ளது.இன்றைய நிலையில் சுமார் ஒரு கோடி ரூபாய் சந்தைப் பெறுமதியுள்ள இக் காணிக்கு  சுற்றுவேலி அமைக்க கிழக்கு மகாணசபை முன்னாள் கல்வி அமைச்சரின் நிதியின் மூலம் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் நிதி  ஒதுக்கியிருந்தார்.
அதன்மூலம்  கடந்த ஒக்டோர் 5ம் திகதி இக்காணிக்கு மன்றத்தின் உப செயலாளர் க.த.பொன்னுத்துரை மற்றும் முன்னாள் தலைவர் க.வல்லிபுரம்  கட்டைபறிச்சான் சனமூக நிலயத்தின் தலைவர் க.கனகசிங்கம் ஆகியோருடன் சென்ற போது இக்காணியில் நில அளவையாளர் ஒருவர் அக்காணியை அளவை செய்து கொண்டிருந்தார்.
அவரிடம் ஏன் இக்காணிணை அளவை செய்கிறீர்கள் என வினவிய போது இக் காணி விற்பனை செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.அதற்கு நாம் இக்காணி இந்து இளைஞர் மன்றத்திற்குறிய காணி அக்காணியை யாரும் விற்பனை செய்யவோ வாங்கவோ முடியாது எனவே அளவை பணிகளை நிறுத்தி விட்டு உடனடியாக காணியை விட்டு வெளியேறுமாறு நான் கோரினேன் அவரும் சென்று விட்டார்.
இந்த நிலையில் நான் உடனடியாக மூதூர் பொலிசில் இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு ஒன்றினை செய்து உதவி மாவட்ட அரசாங்க அதிபர் என்.பிரதீபன் அவர்களுக்கும் இவ்விடயத்தை தெரியப்படுத்தி இருந்தேன்.
இது தொடர்பாக  விசாரணையை பொலிசார் இன்று மேற்ொண்டிருந்தார்.காணியை விற்பனை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் மன்றத்தினர் ஆகியோர் பொலிசுக்கு  13ம் திகதி அழைக்கப்பட்டு காணி தொடர்பான ஆவணங்களை பொலிசாருக்கு வழங்கிதன் நிமிர்தம் பொலிசாரால் விசாரனை செய்யப்பட்டு இக்காணி மன்றத்திற்கே உரியது எனவும் இக்காணியை விற்பனை செய்ய முடியாது எனவும் மன்றத்தினால் முன்னெடுக்கவுள்ள வேலியமைக்க வுள்ள  பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இக்காணிணை விற்பனை செய்த மூவரும் இதனை ஒப்புக் கொண்டு கையொப்பம் இட்டதுடன் காணி மூதூர் இந்து இளைஞர் மன்றத்திற்கே உரித்துடையது என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.இது ொடர்பான கூட்டம் விரைவில் மூதுார் மன்ற் இடத்தில் நடைபெறுவதுடன் உதவி மாவட்டச்செயலாளரும் கலந்து துொண்டு  எதிர்கால மன்ற நடவடிக்கை உறுதிப்படுத்தப்படவுள்ளதாகவும் இங்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது எனவும் மூதூர் இந்து இளைஞர் மன்றத்தின் ஸ்தாபகச் செயலாரும் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளருமான பொ.சற்சிவானந்தம் தெரிவித்தார்.விற்பனைசெய்தவர்கள் குறித்த ஆவணத்தை ரத்துச்செய்யவும் ஏற்றுக்ொண்டமைகுறிப்பிடத்தக்கது.