கொக்கட்டிச்சோலையில் புரட்டப்படாத பக்கங்கள்

0
664

(படுவான் பாலகன்) புரட்டப்படாத பக்கங்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (15) ஞாயிற்றுக்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

நூலின் முதற்பிரதியை நூலின் ஆசிரியர் அ.கமல்தாஸிடமிருந்து ப.திருச்செந்தூரன் பெற்றுக்கொண்டார்.

கவிதை நூலுக்கான நயவுரையை கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் த.மோகனதாசன் வழங்கினார்.
மட்டுநகர் கமல்தாஸ் எழுதிய இக் கவிதை நூலினை, பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினர் வெளியீடு செய்தனர்.

ஒன்றியத்தின் தலைவர் த.மேகராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், வன்னிப்பகுதியின் கவிஞர்கள், மற்றும் ஏனைய கலையார்வலர்களும் கலந்துகொண்டனர்.