மட்டக்களப்பு, ஆரையம்பதி சிவமணி வித்தியாலயத்தில் மகத்தான வரவேற்பு

0
310

மட்டக்களப்பு, ஆரையம்பதி சிவமணி வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இரு மாணவர்கள் அண்மையில் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்டவெட்டுப்புள்ளிகளுக்கு மேல்பெற்றனர். இம்மாணவர்களையும், பர்டசாலையின் ஆசிரியர்களையும் வரவேற்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
பெறுபேற்றின் அடிப்படையில், ச.குருவைஸ்ணவன் 159புள்ளிகளையும், ம.மதுசன் 155புள்ளிகளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வித்தியாலய அதிபர் இ.வேல்சிவம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை சமூகத்தினர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.