தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0
211

டினேஸ்)

அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அவர்கள் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏற்பாட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 14 திகதி மட்டு நகர் காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டமானது முன்னணியின் மாவட்ட இணைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்றதுடன் இதன் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுணதீவு கோட்டப் பொறுப்பாளர் பி.வினோத் வாழைச்சேனை கோட்டப் பொறுப்பாளர் கே.குணசேகரன் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய், கொடூரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, அவர்களுக்கான நீதியை நிலைநாட்டி விடுதலையை வழியுறுத்துவோம், முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வைப் பெற்றுதா போன்ற விடயங்கள் பதாதைகள் மூலம் பிரசுரிக்கப்பட்டு கோஷங்கள் எழுப்பி அவர்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.