படையாண்டவெளி பாடசாலை ; வரலாற்றில் சாதனை

0
1073

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட படையாண்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அண்மையில் வெளிவந்த புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில், இப்பாடசாலையிலிருந்து தோற்றிய  07மாணவர்களும், 70புள்ளிகளுக்கு மேல் பெற்று, 100வீத சித்தியினை அடைந்து வரலாற்று சாதனையை இவ்வருடம் நிலைநாட்டியுள்ளனர்.
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் க.கிஸ்வன் என்ற மாணவன் 173புள்ளிகளைப் பெற்று மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன், நான்கு மாணவர்கள் 100புள்ளிகளுக்கு மேலும், இரு மாணவர்கள் 70புள்ளிகளுக்கும் மேல் பெற்றுள்ளனர்.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 56வருடங்கள் கடந்த நிலையில் இவ்வருடமே இச்சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய மா.வன்னியசிங்கம் அரசசேவையிலிருந்து நேற்று(12) வியாழக்கிழமை ஓய்வு பெற்றதுடன், அவரை கௌரவிக்கும் நிகழ்வும் பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது. இதன் போது பொன்னாடை போர்த்தி அதிபர் கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.