மழை அல்லது இடியுடன் கூடிய மழை

0
331

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் குறிப்பாக சப்ரகமுவ, தெற்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மணிக்கு சுமார் 75 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகத்துடன் காணப்படும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்றுவீசும். பொதுமக்கள் இடிமின்னலிலிருந்து அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.