இரவுவேளையில் மக்கள் ஒன்றிணைவு : கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையம் முன்பு பதற்றம்

0
881

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையம் முன்பு தற்போது இரவுவேளையில் மக்கள் ஒன்று கூடியுள்ளமையினால் அங்கு பதற்ற நிலைமை உருவாகியுள்ளது.
கொக்கட்டிச்சோலையில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம்இன்று(09) மாலை மீட்கப்பட்டது. உயிரழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவிவந்த நிலையில், கொலைசெய்யப்பட்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகவும், கொலைக்கு காரணமானவரை கைதுசெய்யுமாறும் குறிப்பிட்டு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் முன்பாக மக்கள் பலர் ஒன்றுகூடியுள்ளமையினாலேயே இப்பதற்ற நிலையேற்பட்டுள்ளது.
இன்று(09) திங்கட்கிழமை மாலை 08மணிக்கு பொலிஸ் நிலையம் முன்பாக குவிந்த மக்கள் இரவு 10மணியாகியும் அவ்விடத்திலிருந்து அகலவில்லை.