கொக்கட்டிச்சோலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு – மரணத்தில் சந்தேகம்

0
1672
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலையில் வீடொன்றிலிருந்து மரணமடைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று(09) திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம், கொக்கட்டிச்சோலையை சேர்ந்த 28வயதினையுடைய ஒரு பிள்ளையின் தாயான வி.தர்மினி என்பவரினது என இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் மரணத்திற்கு காரணம் கொலையா? தற்கொலையா? என சந்தேகம் நிலவுவதுடன், பிரதே பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பெண்ணின் மரணம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.